ஒரு ஒட்டு மிஸ் ஆகாம முரசு சின்னத்திற்கு விழ வேண்டும் - விஜய பிரபாகரன்
விஜயகாந்த்தின் சொந்த ஊரான ராமானுஜபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், ராமானுஜபுரம் பூத்தை செக் பண்ணுவேன் ஒரு ஓட்டு கூட மிஸ் ஆக கூடாது அனைத்து ஓட்டுகளும் முரசு சின்னத்திற்கு விழ வேண்டும் என உரிமையோடு கேட்டு வாக்கு சேகரித்தார்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் அருப்புக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன்படி விஜயகாந்த் சொந்த ஊரான ராமானுஜபுரம், புலியூரான், பாளையம்பட்டி, கோவிலாங்குளம், கட்டங்குடி, இலங்கிபட்டி, தாதம்பட்டி, தொட்டியாங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது புலியூரான் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக விஜயகாந்த் பிறந்த ஊரான ராமானுஜபுரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட சென்றார். அவருக்கு ராமராஜபுரம் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அப்பகுதி மக்கள் இடையே பேசிய விஜய பிரபாகரன், விஜயகாந்த் பிறந்த ஊரான ராமானுஜபுரத்திற்கு வந்தது எனக்கு சந்தோசமாக உள்ளது. உங்கள் வீட்டு மகன்தான் நான் நீங்கள் எது கேட்டாலும் செய்து கொடுக்கத்தான் போகிறோம். எங்க கல்யாண மண்டபம் கட்டிக் கொடுக்க வேண்டுமென கேட்டீர்கள். அதை வெற்றி பெற்ற பின் தான் கட்டிக் கொடுக்க வேண்டும் என அவசியமில்லை. அம்மா வாக்கு உறுதி கொடுத்து விட்டார்கள்.
இந்த ஊருக்கு என்னென்ன தேவையோ 100க்கு 200 சதவீதமாக செய்து கொடுத்து விடலாம். சொந்தக் காசில் கல்யாண மண்டபம் கட்டிக் கொடுக்க தான் போகிறோம். தேர்தல் முடிந்ததும் அந்த வேலையை பார்த்து விடலாம். அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து விடலாம். எனக்கு வேறு என்ன பேசுவது என்று தெரியவில்லை. நீங்கள் முரசு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என பேசினார்.
அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர், இங்கு பூத் இல்லை என்பதால் ராமானுஜபுரத்தில் இருந்து அனைவரும் கோபாலபுரம் சென்று வாக்களிக்க வேண்டியுள்ளது இங்கு பூத் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த விஜய பிரபாகரன் நம்ம ஜெயிச்சிட்டோம்னா நம்மளே கொண்டு வந்துரலாம் அவ்வளவுதான. குறிப்பாக ராமானுஜபுரம் பூத்தை நான் செக் பண்ணுவேன் ஒரு ஓட்டு கூட மிஸ் ஆகக்கூடாது. ஒரு ஓட்டு கூட வேற சின்னத்திற்கு போகக்கூடாது அனைத்து ஓட்டுகளும் முரசு சின்னத்திற்கு விழுக வேண்டும். கேட்பது என் உரிமை கொடுப்பது உங்கள் கடமை. நீங்கள் அனைவரும் முரசு தினத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பேசி வாக்கு சேகரித்தார்.