தி.மு.க. நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் - செல்வகணபதி

எடப்பாடி அருகே நங்கவள்ளியில் இன்று மேற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி தெரிவித்துள்ளார்.;

Update: 2024-03-14 04:47 GMT

 டி.எம்.செல்வகணபதி

சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி நங்கவள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சியில் இன்று (வியாழக்கிழமை) தி.மு.க. நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. அதாவது காலை 10.30 மணிக்கு ஆவடத்தூர் ஊராட்சிக்கு மீனாட்சி திருமண மண்டபத்திலும், 11.30 மணிக்கு தோரமங்கலம் கரிக்காப்பட்டி ஊராட்சிக்கு காட்டம்பட்டி, தோரமங்கலத்திலும், மதியம் 2 மணிக்கு சூரப்பள்ளி ஊராட்சிக்கு ஜலகண்டாபுரம் ராமலிங்க சவுடேஸ்வரி திருமண மண்டபத்திலும்,

Advertisement

மதியம் 3 மணிக்கு பெரியசோரகை, சின்னசோரகை, எஸ்.ஆர்.கே. திருமண மண்டபம் பெரியசோரகையிலும், மாலை 4 மணிக்கு சாணாரப்பட்டி ஊராட்சிக்கு தாணாவதியூர் சமுதாயக்கூடத்திலும், மாலை 5 மணிக்கு வீரக்கல் ஊராட்சிக்கு வீரக்கல் ரேஷன் கடை அருகிலும் கலந்தாய்வு கூட்டம் நடக்கி்றது. இதில் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News