பாஜகவினரை கைது செய்யவில்லை என்றால் போராட்டம் - திமுக அறிவிப்பு
திராவிட தலைவர்கள் குறித்து அவதூறு ,எஸ்பி அலுவலகத்தில் புகார்;
Update: 2023-12-04 03:50 GMT
மனு அளிக்க வந்த திமுகவினர்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரண்மனை வாசலில் பாஜக சார்பில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சரவணன் மற்றும் நகர செயலாளர் உதயா ஆகியோர் பெரியார், அண்ணா, கலைஞர், முதல்வர், ஆகியோரை தரக்குறைவாகவும், அருவருக்கத்தக்க வகையில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிவகங்கையில் போராட்டம் வெடிக்கும் என தெரிவித்து நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் திமுகவினர் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.