எலவம்பட்டி பகுதியில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

திருப்பத்தூர் எலவம்பட்டி பகுதியில் திமுக வேட்பாளர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட 80 வயது மூதாட்டி நடமடினார்.

Update: 2024-04-09 10:15 GMT

நடமாடிய மூதாட்டி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் எலவம்பட்டி பகுதியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை அப்போது நடனம் ஆடி பொதுமக்களை கவர்ந்த 80 வயது மூதாட்டி திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதியூர் எலவம்பட்டி மற்றும் கொரட்டி பகுதியில் திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் போட்டியிலும் சி.என். அண்ணாதுரை இன்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அப்பகுதி மக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும் தப்பாட்டம் ,மயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சியுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த 80 வயது மூதாட்டி நடனமாடிஷஅங்கு கூடியிருந்த பொது மக்களை கவர்ந்தார்.

அதனைதொடர்ந்து பேசிய C.N. அண்ணாதுரை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்த திட்டங்கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றியதாகவும் இந்த நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் விவசாயகடன், கல்விகடன், தள்ளுபடி செய்யப்படும்,

மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராக உள்ள மகளிர்களுக்கு இரு சக்கரம்வாகனம் வாங்க ஒரு லட்சம் வரை வட்டி இல்லாத கடன் வழங்கப்படும் , மேலும் சுய தொழிலுக்காக மகளிர் குழு பெண்களுக்கு வட்டி இல்லாமல் 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும், மோடி அரசு உயர்த்திய சிலிண்டர் விலையை 500 ரூபாய் வரை குறைக்கப்படும் ,

மேலும் 100 நாள் வேலை திட்டத்தை 100 நாளில் இருந்து 150 நாளாக உயர்த்தப்படும் 400 ரூபாய் கூலி வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார் என பேசினார். இதில் திருப்பத்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல பொறுப்பாளர் சுபாஷ் மற்றும் திமுக , விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், முஸ்லிம் லீக் உள்ளிட்ட தோழமைக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் பலரும் இந்த வாக்கு சேகரிப்பில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News