திமுக வேட்பாளர் தனது வாக்கை பதிவு செய்தார்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் காணக்கிளியநல்லூர் ஊராட்சியில் உள்ள சிறுவயலூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அருண்நேரு தனது வாக்கை பதிவு செய்தார்.

Update: 2024-04-19 05:54 GMT

அருண்நேரு 

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே காணக்கிளியநல்லூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு. இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புள்ளம்பாடி அருகே காணக்கிளியநல்லூர் ஊராட்சியில் உள்ள சிறுவயலூர் கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் 146 ல் திமுக வேட்பாளர் அருண்நேரு தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருண்நேரு திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக்கவும் 40 க்கு 40 வெற்றி பெறும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News