உசிலம்பட்டி அருகே பாதியில் கிளம்பிய திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன்

உசிலம்பட்டி அருகே முதியோர் உதவித்தொகை கேட்டு முதியோர்கள் கூச்சலிட்டதால் பிரச்சாரத்தை பாதியில் முடித்து கிளம்பிய திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன்.

Update: 2024-04-08 11:46 GMT

வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

மதுரை – உசிலம்பட்டி உசிலம்பட்டி அருகே முதியோர் உதவித்தொகை கேட்டு முதியோர்கள் கூச்சலிட்டதால் பிரச்சாரத்தை பாதியில் முடித்து கிளம்பிய திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன். தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காக ஒவ்வொரு கட்சிகளும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக தங்கதமிழ்செல்வன் போட்டியிடுகின்றாhஇவர் இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கட்டக்கருப்பன்பட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் போது; ஊர் மந்தையில் ஏறி பேசிய தங்கதமிழ்செல்வன் அங்கிருந்த வயதான பெண்களிடம் முதியோர் உதவித்தொகை வாங்குகிறீர்களா எனக் கேட்டபோது யாரும் வாங்கவில்லை எனக் கூச்சலிட்டனர்.இப்பகுதி ஊராட்சி மன்றத்தலைவர் 95சதவிகிதம் முதியோர் உதவித்தொகை வருவதாக கூறியுள்ளார்.

எனக்கூறியதும் அருகிலிருந்த ஊராட்சி மன்றத்தலைவியின் கணவர் வாங்கிடோம்னு சொல்லுங்க எனக்கூறியும் கீழே இருந்த பெண்கள் அமைதியாக இருந்தனர்.பின் தங்கத்தமிழ்செல்வன் நான் வெற்றி பெற்றால் 100 சதவிகிதம் முதியோர் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்வேன் எனக்கூறிய போதும் யாரும் எதுவும் பேசாததால் அப்செட் ஆன தங்கதமிழ்செல்வன் பிரச்சாரத்தை பாதியேலேயே முடித்து விட்டு கிளம்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News