பாஜகவினர் மீது காவல் நிலையத்தில் திமுகவினர் புகார்
உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் வைக்கப்பட்ட பிரதமர் மோடி வரவேற்பு பேனர்களை அகற்ற கோரி திமுகவினர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.;
Update: 2024-02-28 06:03 GMT
மனு அளிக்க வந்த திமுகவினர்
நெல்லைக்கு இன்று (பிப்.28) வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் நெல்லை மாவட்ட பாஜகவினர் சாலை ஓரங்களில் வைத்துள்ள விளம்பர பதாகைகள் உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் உள்ளதால் உடனடியாக அகற்ற வேண்டும் என இன்று (பிப்.28) காலை நெல்லை மாநகர திமுக வழக்கறிஞர் அணி சார்பில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.