வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றும் திமுக - இளங்கோவன்
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி விட்டதாக தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி உட்பட்ட 33 வார்டு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் தேமுதிக மாவட்ட செயலாளர் இளங்கோவன், நகரச் செயலாளர் மோகன் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
அப்போது பேசிய இளங்கோவன், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாகவும் கடுமையான விலைவாசி உயர்வுக்கு காரணம் திமுக அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை தவிர வேறு எந்த திட்டங்களையும் திமுக அரசு செய்ததில்லை. அதிமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கு தாலிக்கு தங்கம் ,மாணவர்களுக்கான மடிகணினி , விலையில்லா ஸ்கூட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தபட்டது. மக்களை ஏமாற்றும் திமுக ஆட்சிக்கு தக்க பாடப் புகட்ட வேண்டும். என பேசினார்.