தலித் விரோத நடவடிக்கைகளை தி.மு.க., ஊக்கப்படுத்துகிறது - தமிழரசன்
தலித் விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மற்றும் பாதுகாக்கும் அரசாக தி.மு.க. செயல்படுகிறது என இந்திய குடியரசு கட்சித் தலைவர் தமிழரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
தலித் விரோத நடவடிக்கைகளை உற்சாகப்படுத்தும், ஊக்குவிக்கும் மற்றும் பாதுகாக்கும் அரசாக தி.மு.க. செயல் பட்டு வருகிறது என இந்திய குடியரசு கட்சிஜ தலைவர் செ.கு. தமிழரசன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். டாக்டர் அம்பேத்கரின் 67 வது நினைவு நாளையொட்டி இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கும் விழா இன்று மாலை காஞ்சிபுரம் மண்டபத்தில் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செ.கு. தமிழரசன் தலைமையில் நடைபெறுகிறது.
இவ்விழாவில் அயோத்திதாசர் விருது கார்மேகம் என்பவருக்கும், சிவராஜ் விருது காரல் மார்க்ஸ் சித்தார்த் என்பவருக்கும் , தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் விருது செந்தமிழ் சரவணன் என்பவருக்கும், அன்னை மீனாம்பாள் சிவராஜ் விருது சபிதா முனுசாமிக்கும் வழங்கப்பட உள்ளது. இவ்விழாவிற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த இக்கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன், மத்திய அரசு கடந்த 10 ஆண்டு காலமாக வறுமை ஒழிக்கப்படும் என கூறிய நிலையில் தற்போது வரை வறுமை ஒழிக்கப்படவில்லை. அனைவருக்கும் கழிவறை எனக் கூறிய நிலையில் இத்திட்டமும் நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினர்.
மேலும் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தமிழகம் முதல் இடம் வகிக்கிறது. கடந்த 15 மாதங்களாக வேங்கை வயல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்பதும் இதற்கு உதாரணம் எனவும் ,தலித் விரோத நடவடிக்கைகளை உற்சாகப் படுத்துகின்ற, ஊக்குவிக்கின்ற, அவர்களைப் பாதுகாக்கும் வேலியாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது என கடும் குற்றச்சாட்டு தெரிவித்தார். இந்த சத்தியத்தின் போது மாநில பொருளாளர் கௌரிசங்கர் மற்றும் மாவட்ட செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.