தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம்
ராணிப்பேட்டையில் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் காந்தி பங்கேற்றார்.
Update: 2024-05-25 11:36 GMT
ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகரில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன், மாவட்ட துணை செயலாளர்கள் துரைமஸ்தான், சிவஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது பேசிய அவர் வருகிற 3-ந் தேதி கலைஞரின் நூற்றாண்டு விழாவை ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் ரத்ததானம், கண் தானம், அன்னதானம், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், இனிப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் சிறப்பாக கொண்டாட வேண்டும் என தெரிவித்தார். கூட்டத்தில் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் முதல்-அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வெற்றிக்கு வித்திட்ட இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தல், கடந்த ஆண்டு கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறந்த முறையில் கொண்டாடிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தல், மாவட்டம் முழுவதும் அம்மா உணவகங்களில் அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் ஒரு ஆண்டு இலவசமாக உணவு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.