திமுக மாவட்ட செயலாளர் அறிக்கை
மாநில உரிமைகள் காத்திட ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் திமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளவேண்டும் என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏவுமான பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் அறிவுரைப்படி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஒய். பிரகாஷ், அறிவுரைப்படி மாநில உரிமைகள் காத்திட ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் கட்சியின் சார்பில் இன்று காலை 10.30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில மாவட்ட மாநகா ஒன்றிய பகுதி பேரூர்செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், தலைவர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், இந்நாள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள், கிளை செயலாளர்கள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்ன அறிவிப்பு வெளியிட்டுள்ளார்