நாளை திமுக கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி செயற்குழு கூட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Update: 2024-05-24 14:02 GMT
தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் ஆலோசனைப்டி தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நாளை காலை 11 மணி அளவில் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது. கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.