திமுக தேர்தல் அறிக்கை குழு இன்று வருகை
தி.மு.க., நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு இன்று தூத்துக்குடி வருகை உள்ளதாக மாவட்டச் செயலாளர்கள் கீதாஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கீதாஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: 2024-ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்பி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். குழுவின் முன்னாள் எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.இராஜா, கோ.வி.செழியன் எம்எல்ஏ, சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ, கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்பி, எம்.எம்.அப்துல்லா எம்பி, டாக்டர் எழிலன் நாகநாதன் எம்எல்ஏ, சென்னை மேயர் பிரியா ஆகியோர் உள்ளனர்.
இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் சென்று பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்கள்.
அதன்படி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு இன்று காலை 10.00 மணி அளவில் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை, காமராஜ் கல்லூரி எதிரில் உள்ள மாணிக்கம் மஹாலில் வைத்து கோரிக்கை மனுக்களை பெற இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பல்வேறு தரப்பட்ட தொழில் முனைவோர்கள், வர்த்தகர்கள், வியாபாரிகள், விவசாயிகள், மருத்துவர்கள், மீனவர்கள், மாணவர் சங்கங்கள், தொழிலாளர் நல பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். வருகை தரும் அனைவரும் தங்கள் கருத்துக்களை மனுவாக எழுதிக் கொண்டு வரவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.