திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நாளை சேலம் வருகை

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நாளை சேலம் வருகை தர உள்ளதாக சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-02-10 03:47 GMT

 திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நாளை சேலம் வருகை

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, எம்.எல்.ஏ.க்கள் கோ.வி.செழியன், எழிலரசன், எழிலன், எம்.பி.க்கள் ராஜேஸ்குமார், அப்துல்லா, சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட குழுவினர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு சேலம் ஐந்து ரோடு சென்னீஸ் கேட்வே ஓட்டலுக்கு வருகை தருகின்றனர்.

அங்கு பல்வேறு தரப்பினரை சந்தித்து தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய திட்டங்கள் குறித்து கோரிக்கை மனு பெற உள்ளனர். எனவே சேலம் மாவட்டத்தை சேர்ந்த தொழில்துறையினர், வியாபாரிகள், கல்வியாளர்கள், விவசாயிகள், சிறு, குறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், வணிகர் சங்கங்கள், ஒன்றிய அரசின் துறைகளின் வளர்ச்சியில் ஆர்வம் உள்ள சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை மனுக்களாக வழங்கிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News