அதிமுக.,வில் இணைந்த தி.மு.க., நிர்வாகிகள்

மதுரையை சேர்ந்த திமுக., நிர்வாகிகள், அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக.,வில், அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தனர்.;

Update: 2024-01-23 09:54 GMT

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர்மன்ற தலைவர் சகுந்தலா கட்டபொம்மன் உட்பட திமுகவின் மூன்று முக்கிய நிர்வாகிகள் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரும், கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்பி. உதயகுமார் ஏற்பாட்டில், திமுகவைச் சேர்ந்த மதுரை மாவட்ட உசிலம்பட்டி நகர் மன்ற தலைவர் சகுந்தலா கட்டபொம்மன் தலைமையில் திமுக முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் சோலை ரவி, மதுரை தெற்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் விஜய் ஆகியோர் இன்றைய தினம் அக்கட்சியில் இருந்து விலகி கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

Advertisement

DMK executives affiliated to AIADMKசேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது புதிதாக கழகத்தில் இணைந்தவர்களை பொது செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். அப்போது மூன்று பேரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில், திமுகவில் மேல்மட்டத்தில் உள்ள நிர்வாகிகள் தங்களைப் போன்றவர்களை செயல்பட விடாமல் முட்டுக்கட்டை போடுவதாக வேதனை தெரிவித்தனர் இது தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை். என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News