*திமுக அரசு காலாவதி அரசு.* - ஆர்பி உதயகுமார் பேட்டி

திமுக எந்த முடிவு எடுத்தாலும் காலம் தாழ்த்தி காலாவதியாக தான் முடிவு எடுக்கிறது என ஆர்பி உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.

Update: 2024-05-18 03:48 GMT

திமுக எந்த முடிவு எடுத்தாலும் காலம் தாழ்த்தி காலாவதியாக தான் முடிவு எடுக்கிறது என ஆர்பி உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.


உணவு உற்பத்தியில் திமுக எந்த சாதனை படைக்கவில்லை.? மக்களுக்கு வேதனை தான் மிஞ்சு உள்ளது. - எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி. மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று காலை T.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். தொடர்ந்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். முன்னதாக அம்மா கோவில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். _தொடர்ந்து, செய்தியாளரை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது._ ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் தென்மேற்கு பருவமழையும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் வடகிழக்கு பருவ மழை பெய்யும். தென்மேற்கு பருவ மழையில் அண்டை மாநிலங்களில் இருந்து நமக்கு உபரி நீர் கிடைக்கும். பருவமழை காலங்களில் நீர் சேமிக்க திமுக அரசு தோல்வி அடைந்ததால் கடந்த வடகிழக்கு பருவமழையின் போது நீரை சேமிக்க முடியாமல் 22 மாவட்டங்களுக்கு கடும் வறட்சி ஏற்பட்டது. தற்போது கோடை மழை பெய்வதால் நமக்கு ஆறுதலாக உள்ளது. தமிழகத்தில் தற்போது ஏரிகள், கண்மாய்களில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்தை அரசு செய்ய தவறிவிட்டது. எடப்பாடி முதலமைச்சராக இருந்த பொழுது பொதுப்பணித்துறை ஏரிகள், கண்மாய்கள், உள்ளாட்சியில் உள்ள ஏரிகள், கண்மாய்களை தூர்வாரினார்.

இதன் மூலம் தமிழகத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படாமல் உணவு உற்பத்தியில் ஐந்து முறை மத்திய அரசின் கிருஷ்கர்மா விருது பெற்றது. தற்போது உணவு உற்பத்தியில் எந்த சாதனை படைக்கவில்லை வேதனை தான் மிஞ்சு உள்ளது. காவேரி ஆணையம் தொடர்பான கூட்டத்தில் தமிழக அரசு ஆன்லைன் மூலம் பங்கேற்பதாக செய்தி வந்துள்ளது. தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினையான காவேரி பிரச்சனையை தீர்க்காமல் அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் நேரடியாக பங்கேற்று பல்வேறு அழுத்தங்களையும், அறிவுறுத்தல்களை எடப்பாடி தொடர்ந்து வலியுறுத்தி கூறிவருகிறார். நேரிலே நாம் கலந்து கொண்டால் கூட நம்மை ஏமாற்றி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை பறிக்கும் அளவில் செயல்பட்டனர். தற்போது மேகதாது அணையை கூட கட்ட முயற்சிக்கிறார்கள். தற்போது காணொளி காட்சி மூலம் கலந்து கொள்வது என்பது தமிழக மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது திமுக அரசின் செயல் உப்புச்சப்பில்லாத உள்ளது. தமிழகத்தில் வெப்ப சலனத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை கோடை மழை காலத்தில் திமுக அரசு எடுக்கிறது. அதிமுக சார்பில் இதை சுட்டி காட்டிய போது தற்போது உத்தரவை வாபஸ் பெற்றுள்ளனர். செய்ய வேண்டிய நேரங்களில் செய்ய வேண்டிய பணிகளை செய்யாமல் அரசு உள்ளது. தற்போது காலாவதியான பேருந்து ஓடுகிறது.? புதிய பேருந்து எதுவும் வாங்கவில்லை. ஏற்கனவே, உள்ள சேசில் கூண்டு கட்டி அதை ஓட விடுகின்றனர். அது மட்டும் அல்ல அரசு மருந்துகள் எல்லாம் காலாவதியாக உள்ளது திமுக எந்த முடிவு எடுத்தாலும் காலம் தாழ்த்தி காலாவதியாக தான் முடிவு எடுக்கிறது.

ஆகவே, திமுக அரசு காலாவதி அரசாக உள்ளது. தமிழகத்தில் கஞ்சா 2.0, 3.0, 4,0 என பலமுறை கஞ்சா வேட்டையில் நடவடிக்கை எடுத்த போது கஞ்சாவை கட்டுப்படுத்த முடியவில்லை.? தலைமைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டாலும் பலன் இல்லை.! தற்போது முதலமைச்சர் ஆய்வு நடத்தி என்ன பலன் இருக்கும்.? தமிழகத்தில் போதை பொருள் காட்டுதீயாக பரவி இளைய சமுதாயம் போதைப் பொருளால் அடிமையாகி சீர்கெட்டு வருவதால் நமது இதயம் சுக்கு நூறாக உடைகிறது. காட்டுத்தீயை தண்ணீரை பீய்ச்சி அணைக்க முடியாது.! வெள்ளத்தால் திரண்டு வரும் நீரால் தான் அணைக்க முடியும். அதேபோல தமிழகத்தில் காட்டுத் தீயாக உள்ள கஞ்சா போதை பொருளை தடுக்க வேண்டுமென்றால் அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் இதை மயில் இறகால் தடவக்கூடாது என கூறினார்.

Tags:    

Similar News