ஆழ்ந்த நித்திரையில் உள்ளது திமுக அரசு – முன்னாள் அமைச்சர்

தென்மேற்கு பருவமழை மூலம் கிடைக்கும் உபரிநீரை, உயிர்நீராக ஏரி, குளங்களை தூர்வாரி தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

Update: 2024-05-16 13:37 GMT

தென்மேற்கு பருவமழை மூலம் கிடைக்கும் உபரிநீரை, உயிர்நீராக ஏரி, குளங்களை தூர்வாரி தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவ முகாம் மற்றும் அன்னதானம் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு, மருத்துவ முகாம் மற்றும் அன்னதானத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்., திமுக அரசு செயல்படாத அரசு என்பதற்கு உதாரணமாக நேற்று கட்டுமான தொழிலாளர்களுக்கு ஒரு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது., கொழுத்தும் வெயிலில் உயிரை இழந்த தொழிலாளர்கள் எத்தனை பேர் என தெரியவில்லை. அதற்கான நிவாரணமும் அரசு அறிவிக்கவில்லை.இப்படியெல்லாம் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதும் எடுக்காமல் தற்போது ஆழ்ந்த நித்திரையில் தூங்கி எழுந்த அரசாக இன்று கட்டுமான தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்ததை பார்க்கும் போது சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை.

இன்று வெப்பசலனத்தால் ஏற்படுகின்ற தாக்கதை காப்பாற்றுங்கள் நடவடிக்கைகள் எடுங்கள் என சொன்னால் அவர்கள் உயிர் போன பின் காப்பாற்றுகிறோம், நடவடிக்கை எடுக்கிறோம் என சொல்கிற அரசை எந்த நிலையில் வைத்து பார்ப்பது என தெரியவில்லை.வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே வரும் தென்மேற்கு பருவமழை மூலம் கிடைக்கும் உபரிநீரை, உயிர்நீராக ஏரி, குளங்களை தூர்வாரி தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டியளித்தார்.

Tags:    

Similar News