அனைத்து தரப்பினரையும் ஏமாற்றியது திமுக அரசு: என்.ஆர்.சிவபதி

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2024-03-16 06:17 GMT

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.


தமிழக முழுவதும் அதிமுகவினர் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வின் 76 வந்து பிறந்தநாளினையொட்டி சிறப்பாக கொண்டாடி பொது மக்களுக்கு பல்வேறு நல திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றனர். அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் மாவட்ட முழுவதும் காஞ்சிபுரம் உத்திரமேரூர் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் ஓரகடம் படப்பை குன்றத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுக் கூட்டங்களும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு அணி பிரிவுகள் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டு அதிமுக ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நல திட்டங்கள் மற்றும் தற்போதைய திமுக அரசு பொதுமக்களை ஏமாற்றி வரும் நிலைகளையும் எடுத்துரைத்து உரையாற்றி வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞரணி சார்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே மண்டிதெரு பகுதியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆனந்தன் தலைமையில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முன்னால் அமைச்சர் என் ஆர் சிவபதி, சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா பொருட்கள் என செயல்படுத்திய பல்வேறு திட்டங்களில் விளக்கி எடுத்துரைத்தும் ஆனால் தற்போது மூன்று ஆண்டுகளாக பதவி வகித்து வரும் திமுக அரசு மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசி தற்போது வரை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. திருமணப் பெண்கள், பள்ளி கல்லூரி மாணவ , மாணவிகள், அரசு ஊழியர்கள் என பல தரப்பினரையும் ஏமாற்றி ஆட்சி செய்து வருகிறது எனவும் இதை மாற்றிக் கொள்ளும் வகையில் தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக வாக்களித்து அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் கூட்டத்தில் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News