முத்துகிருஷ்ணபேரியில் திமுகவினர் தீவிர பிரச்சாரம்
நெல்லை தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூசை ஆதரித்து, திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் முத்துகிருஷ்ணபேரியில் நேற்று திமுகவினர் பிரசாரம் மேற்கொண்டனர்.
தென்காசி தெற்கு மாவட்டம், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், முத்துகிருஷ்ண பேரியில் திருநெல்வேலி தொகுதி இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூசை ஆதரித்து திமுகவினர் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் தலைமை வகித்து, திமுக அரசின் சாதனைகளையும், தேர்தல் அறிக்கையினையும் வீதி, வீதியாக நடந்து சென்று, பொதுமக்களிடம் எடுத்துக்கூறி காங்கிரஸ் வேட்பாளருக்கு கை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
இதில் ஒன்றிய செயலாளர் என். எல். சிவன்பாண்டியன், கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவரும், கிழக்கு ஒன்றிய தேர்தல் பொறுப்பாளருமான பி. எம். எஸ். ராஜன், ஒன்றிய கவுன்சிலர் மகேஷ்வரி சத்தியராஜ், கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கோமு, நிர்வாகிகள் ஆசிரியர் பழனிச்சாமி, பவுன்ராஜ், கைக்கொண்டான், மனுவேல்ராஜ், காளிமுத்து, சேர்மன், அன்பரசன், சமுத்திரபாண்டி, காங்கிரஸ் நிர்வாகிகள் ராமச்சந்திரன், ராமசாமி நாடார் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.