திக, கம்யூனிச கொள்கைகளை பின்பற்றுகிறது திமுக - அர்ஜுன்சம்பத்

திமுக அண்ணா, கலைஞர் கொள்கைகளை மறந்து தி. க,கம்யூனிச கொள்கைளை பின்பற்றி அவர்களின் கை பாவையாக மாறிவிட்டதாக திருப்பூரில் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன்சம்பத் தெரிவித்தார்.

Update: 2024-01-23 05:45 GMT

திமுக அண்ணா , கலைஞர் கொள்கைகளை மறந்து தி க ,கம்யூனிச கொள்கைகளை பின்பற்றி அவர்களின் கைப்பாவையாக மாறிவிட்டதாக திருப்பூரில் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி அளித்தார்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பூர் ராயபுரத்தில் உள்ள இந்து மக்கள் கட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது . இதில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டிருந்தார். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பு ராம பூஜைகள் நடத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாடு முழுவதும் விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது , 

ஆனால் தமிழகத்தில் திமுக அரசு இதனை இருட்டடிப்பு செய்ய பல்வேறு வழிகளை கையாண்டிருப்பது கண்டனத்துக்குரியது எனவும் , பல்வேறு நாடுகளும் கூட விடுமுறை அளித்தது மட்டுமல்லாது ராமர் கோவிலுக்காக சீர்வரிசையும் , தீர்த்தங்களும் வழங்கி வரக்கூடிய நிலையில் திமுக அரசு கோவில்களில் அன்னதானம் வழங்கவும் , ராமபூஜை செய்யவும் தடை விதித்திருப்பது கண்டனத்துக்குரியது . ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி முடிந்த பின்பு பாரத பிரதமர் தமிழகத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும் பேட்டி அளித்தார்.

திமுக தற்போது அண்ணா, கலைஞர் கொள்கைகளை மறந்து திராவிடர் கழகம் மற்றும் கம்யூனிச கொள்கைகளை பின்பற்றி அவர்களின் கொள்கைகளை செயல்படுத்தி வருவதாகவும்.  இது மு க ஸ்டாலினுக்கு தெரியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இது திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் எனவும் தெரிவித்தார்.  மேலும் சேலம் மாநாடு பிரியாணி மாநாடாக அமைந்ததாகவும் , திமுகவில் பயிற்சி வகுப்புகளையோ கொள்கைகளை விளக்கவோ ஆட்கள் இல்லாதது போல திராவிடர் கழகம் மற்றும் கம்யூனிஸ்ட்டை சேர்ந்தவர்களை வைத்து பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.  திமுகவின் சேலம் மாநாடு திமுக ஆட்சி அகற்றப்படுவதற்கு காரணமாக அமையும் எனவும் கோவையில் மாநாடு நடத்திய பின் கலைஞர் கருணாநிதியால் முதல்வராக முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் , அதே போல் தான் சேலம் மாநாடு திமுகவிற்கு எதிராக அமையும் என பேட்டியளித்தார். இந்நிகழ்வின் போது கட்சியின் மாவட்ட மாநகர நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்

Tags:    

Similar News