10 ஆயிரம் பேர் சீருடையுடன் பங்கேற்க வேண்டும்
பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தெற்கு மாவட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் த.வேணுகோபால் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார்.இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். திராவிட இயக்கம் உருவாக காரணமாக இருந்த அயோத்திதாசப் பண்டிதர் மற்றும் முன்னாள் முதல்வர் வி.பி.சிங் ஆகியோருக்கு சிலை அமைத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், டிசம்பர் 17 -ந் தேதி இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டிற்கு 10 ஆயிரம் இளைஞர்கள் சீருடையுடன் கலந்துகொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்பி, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாநில பொறியாளர் அணி செயலாளர் கு.கருணாநிதி, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் ப்ரியா விஜயரங்கன், தொமுச பேரவை செயலாளர் கவுந்தர ராஜன், நகர செயலாளர் ப.கார்த்தி வேல்மாறன், மாவட்ட அமைப்பா ளர்கள் டிவிஎம் நேரு, ஏ.ஏ.ஆறுமுகம், விஜி என்கிற விஜயராஜ், சி.ராம் காந்த், இரா.கார்த்திகேயன், பிரவீன் ஸ்ரீதரன், சர்தார் காசிம், பொதுக்குழு உறுப்பினர்கள் கென்னடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் நன்றி கூறினார்.