சிறுபான்மையினர் அமைப்பினரிடம் ஆதரவு கோரிய திமுக அமைச்சர்கள்
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு சிறுபான்மையினர் அமைப்பினரிடம் அமைச்சர்கள் ஆதரவு கோரினர்.
Update: 2024-07-03 04:02 GMT
விழுப்புரம் மாவட்டம் - விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி, முண்டியம்பாக்கம் பகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து சிறுபான்மையினர் கூட்டமைப்பின் சார்பில் தேர்தல் பிரச்சார ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மஸ்தான் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இணைந்து கலந்துகொண்டு ஆதரவு கோரினர்,உடன் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அண்ணன் பீட்டர் அல்போன்ஸ், தேவலாய பணியாளர்கள் நல வாரிய தலைவர், சிறுபான்மையினர் ஆணையம் துணை தலைவர் மற்றும் விக்கிரவாண்டி பேரூராட்சி தலைவர், பேரூர் செயலாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.