காவல் நிலையத்தில் திமுக ஒன்றிய செயலாளர் புகார்

காவல் நிலையத்தில் திமுக ஒன்றிய செயலாளர் புகார் மனு அளித்தார்.

Update: 2024-06-19 14:38 GMT

திமுக

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள உலிபுரம் கிராமத்தில் நடைபெற்ற பாஜக பொதுகூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலினை பாஜக மாநில துணைதலைவர் K.p ராமலிங்கம் மிகவும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டி தம்மம்பட்டி காவல் நிலையத்தில் கெங்கவல்லி திமுக ஒன்றிய செயலாளர் ஆர். சித்தார்த்தன் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.
Tags:    

Similar News