தர்மபுரியில் நாளை திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நாளை 25ம்தேதி நடக்கிறது.;
Update: 2024-02-24 02:56 GMT
பைல் படம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலை மையில், காணொலி காட்சி மூலமாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் அறிவுறுத்தப்பட்டவாறு, தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக காலை 11 மணிக்கு வன்னியர் திருமண மண்டபத்தில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில். சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் டாக்டர் தருண், கேவி குப்பம் கோபி முன்னிலையில் கூட்டம் நடக்கிறது. இதில் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள். தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள். ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், கிளை நிர்வாகிகள் அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பூத் ஒருங்கிணைப் பாளர்கள், பிஎல்ஏ -2 நிர்வாகிகள் என அனை வரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனவும் இக்கூட்டத்தில், இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணை பிரசாரம் தொடங்குவது குறித்தும், மார்ச் 1ம் தேதி முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாடுவது மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடத்துவது குறித் தும், வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் விவாதிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.