அருமனை போலீஸ் நிலையம் முன் திமுகவினர் போராட்டம் 

கன்னியாகுமரி மாவட்டம்,அருமனை அருகே திமுக நிர்வாகியை தாக்கியவர்கள் மீது வழக்குபதிவு செய்ய கோரி திமுகவினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.;

Update: 2024-02-28 01:10 GMT
போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்திய திமுக வினர்

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே காரோடு பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி சாபு (29). இவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது அவரை சிலர் அடித்து உதைத்துள்ளனர். இது தொடர்பாக சாபு அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று திமுக தொண்டர்கள் போலீஸ் நிலையம் முன் போராட்டம் நடத்தினர். இதை அடுத்து போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து திமுகவினர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News