தோல்வி பயத்தில் திமுக அத்துமீறல்: ராமதாஸ் குற்றச்சாட்டு

தோல்வி பயத்தில் திமுக அத்துமீறுவதாக ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளர்.

Update: 2024-07-05 15:35 GMT

ராமதாஸ்

தைலாபுரம் தோட்டத்தில்மருத்துவா் ச.ராமதாஸ் அளித்தப் பேட்டி: விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் ஆளும் திமுக தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமலிருப்பது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு, மதுவிலக்கை அமல்படுத்தாமல் இருப்பது உள்ளிட்டவற்றால் தமிழக மக்கள் திமுக அரசு மீது கடுங்கோபத்தில் உள்ளனா்.திமுக அத்துமீறல்: இதனால், விக்கிரவாண்டி இடைத்தோ்தல் முடிவு ஆளும் கட்சிக்கு எதிராகவே அமையும். தோல்வி பயத்தால் திமுக அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. இதை முறியடித்து பாமக வேட்பாளா் சி.அன்புமணி சுமாா் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா். 

அதிமுகவினா் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும்.அதிமுகவுக்கும், பாமகவுக்கும் பொது எதிரி திமுகதான். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட முடியாத திமுக அரசு தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.மீண்டும் கள்ளச்சாராயம்: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி 65 போ் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், குமாரமங்கலத்தைச் சோ்ந்த ஒருவா் கள்ளச்சாராயத்துக்கு உயிரிழந்துள்ளாா். இருவா் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் உள்ளனா். 

இதன்மூலம் கள்ளச்சாராய விற்பனையை தடுப்பதில் அரசு படுதோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

Tags:    

Similar News