திமுக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல்லில் திமுக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

Update: 2024-06-01 07:30 GMT

 நாமக்கல்லில் திமுக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் முகவர்கள் நடந்து கொள்ள வேண்டிய விதங்கள் குறித்தும், கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும், கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும் திமுக சார்பாக பயிற்சி கூட்டம் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் காணொளி காட்சியின் மூலம் நடைபெற்றது.

இந்த காணொளி பயிற்சியை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் என். ஆர் இளங்கோ நடத்தினார். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுகசெயலாளர் மதுரா செந்தில் உள்ளிட்ட சுமார் 100க்கும் மேற்பட்டோர் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News