துண்டுபிரசுரங்கள் வழங்கிய திமுகவினர்

திருப்பத்தூர் நகர் பகுதியில் இல்லம்தோறும் ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனையின் துண்டுப் பிரசுரங்களை திமுகவினர் பொதுமக்களுக்கு வழங்கினர்.

Update: 2024-02-29 15:55 GMT

துண்டு பிரசுரங்கள் வழங்கல்

திருப்பத்தூர் ஜின்னா ரோடு பகுதியில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் மாநில மருத்துவர் அணி துணை செயலாளரும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான கம்பன் திமுக அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகள் மற்றும் 2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கடை கடையாக சென்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன், 4.வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கௌரி ஐயப்பன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஐயப்பன், விளையாட்டு மாவட்ட மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன், நகரமன்ற துணை தலைவர் சபியுள்ளா 8 வது வார்டு நகர மன்ற உறுப்பினருமான. ஜோதி ராஜன், டி ரகுநாத், சவுத் அகமது, கந்திலி ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், வார்டு செயலாளர்கள், வார்டு பிரதிநிதிகள், நகர மன்ற உறுப்பினர், திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News