39 தொகுதிகளிலும் திமுக நிச்சயம் கைப்பற்றும் திமுக கொள்கை பரப்புச் செயலாளர்

மயிலாடுதுறையில் நடைபெற்ற மயிலாடுதுறைநாடாளுமன்றத் தொகுதி திமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் துணைவேந்தரும் திமுக கொள்கை பரப்புச்செயலாளர் சபாபதி மோகன் சிறப்புரையாற்றினார்.;

Update: 2024-02-17 06:28 GMT

 டாக்டர் சபாபதி மோகன் 

மயிலாடுதுறையில் நடைபெற்ற மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி திமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் துணைவேந்தரும் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் டாக்டர் சபாபதி மோகன் உரையாற்றுகையில், மகளிர் உரிமைத் தொகை, மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை என திமுகவின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகள் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 1,10,000 பேர் இருக்கின்றனர். எனவே, இந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் திமுக குறைந்தது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு 9 விழுக்காடு பங்களிப்பை வழங்குகிறது. ஆனால், மத்திய அரசு பொருளாதாரம், கல்வி, வேளாண்மை, விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. 10 வருட பாஜக ஆட்சியில் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மோடி அரசு பெருமுதலாளிகளுக்கு 14லட்சம் கோடி ரூபாயை கடன் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், விவசாய விளைபொருள்களுக்கு மத்திய அரசு உரிய விலையை தர மறுக்கிறது. இங்குள்ள அமைச்சர், எம்.பி, கொறடா, எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு பென்சன் வழங்கும் முதல் மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையை கொண்டுவர வலியுறுத்த வேண்டும். தமிழக அரசு 25 லட்சம் பட்டதாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கியுள்ளது. ஆனால், மோடி அரசு விஸ்வகர்மா யோஜனா என்ற பெயரில் ரூ.1 லட்சம் வழங்கி குலத்தொழிலை செய்ய கட்டாயப்படுத்துகிறது. குலத்தொழில் முறையை மாற்றியது பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர். அதனால்தான் திராவிட மாடல் என்று சொன்னால் மோடிக்கு எரிகிறது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியன மத்திய அரசின் கூண்டுக்கிளிகளாக மாறிவிட்டன என ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் கூறுகிறார். மு.க.ஸ்டாலின் கை காட்டுபவர் இந்தியாவின் பிரதமராக ஆட்சிக் கட்டிலில் அமர்வார். இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ வீ. மெய்ய நாதன்,மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ, சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏக்கள் குத்தாலம் கல்யாணம் குத்தாலம் அன்பழகன் தமிழக அரசு தலைமை , கொறடா கோவி செழியன் தஞ்சை மாவட்ட திமுக செயலாளர் கல்யாண சுந்தரம் மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் குண்டாமணி செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப அணி தஞ்சை மண்டல பொறுப்பாளர் ஸ்ரீதர்,ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News