கனிமொழி எம்.பியுடன் மகளிர் அணியினர் வெற்றிக் கொண்டாட்டம்
மகளிர் உரிமை மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்கு கனிமொழி எம்.பியை நாமக்கல் மகளிர் அணியினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.;
Update: 2023-10-23 06:19 GMT
கனிமொழி எம்.பியை சந்தித்த நாமக்கல் திமுக மகளிர் அணியினர்
சென்னையில் மகளிர் உரிமை மாநாடு வெற்றிகரமாக நடத்தியதற்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ப.ராணி தலைமையில் மகளிர் அணி நிர்வாகிகள் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் இந்த சந்திப்பின் போது மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ப.ராணி, திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியை லவாகமாக தூக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.