தென்காசி : திமுக செயற்குழு கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Update: 2024-01-14 11:37 GMT
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது

தென்காசி தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் இலஞ்சியில் நடைபெற்றது.இந்த கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் சுந்தரமகாலிங்கம் தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ஆறுமுகச்சாமி, செல்லத்துரை, மாவட்ட துணைச் செயலா் கனிமொழி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன் சிறப்புரையாற்றினாா்.

ஜன. 21இல் சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் திரளாக கலந்துகொள்வது, தமிழா் திருநாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள திமு கொடிகம்பங்களை புதுப்பித்து திமுக கொடியேற்றுவது, பாக முகவா் பணியை விரைந்து முடித்து தலைமைக்கு அனுப்புவது என கூட்டத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. பொதுக்குழு உறுப்பினா்கள் சாமித்துரை, ராஜேஷ்வரன், ஒன்றியச் செயலா்கள் சீனித்துரை,ஜெயக்குமாா், ரவிசங்கா், அழகுசுந்தரம், நகரச் செயலா்கள் சாதிா் உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News