திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
மயிலாடுதுறையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று, மதிய உணவு வழங்கப்பட்டது..;
By : King 24X7 News (B)
Update: 2023-11-27 15:17 GMT
உணவு வழங்கிய திமுகவினர்
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாளை, திமுகவினர், மயிலாடுதுறையில் உற்சாகமாக கொண்டாடினர். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு, நகர செயலாளர் குண்டாமணி செல்வராஜ் தலைமையில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் உணவு பொட்டலங்களை வழங்கினர்.