ஒரே நேரத்தில் திமுக, பாஜக, அதிமுக பிரசாரம் - கொடைக்கானலில் பதற்றம்
கொடைக்கானலில் நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்தின் போது திமுக, பாஜக, அதிமுகவினர் ஒரே இடத்தில் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.மேலும் திமுகவினரும், பாஜகவினரும் மாறி மாறி கோஷங்களை எழுப்பியதால் பதற்றம் நிலவியது.
தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் திமுக மற்றும் பிஜேபி கட்சியினர் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரம் காட்டினர், மேலும் இரண்டு கட்சியினரும் நகரின் முக்கிய சாலைகள் வழியாக பேரணியாகவும், இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்த நிலையில் முஞ்சிக்கல் சந்திப்பில் இரண்டு கட்சியினரும் சந்தித்த நிலையில் இருவரும் தங்களது தலைவர்கள் பெயர்களை சொல்லி மாறி மாறி கோசம் எழுப்பியதால் பதற்றமான சூழல் உருவாகியது.
மேலும் அதிமுக கட்சியினரும் திடீரென மூஞ்சிக்கல் பகுதிக்கு வந்தனர், இதனால் மூன்று கட்சியினரும் சேர்ந்து 500 க்கும் மேற்பட்டோர் மொத்தமாக மூஞ்சிக்கள் பகுதியில் ஒன்று திரண்டதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் பாதிப்பு அடைந்தனர், மேலும் திமுகவினர் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிஜேபியினர் பாட்டு பாடி ஆட்டம் ஆடி கோசம் இட்டனர், பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் போலீசாரும் குவிக்கப்பட்டு மூன்று கட்சியினர் குவிந்துள்ள பகுதியில் தடுப்புகளை அமைத்தனர்,இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது, தேர்தல் நேரம் முடிந்ததும் அனைவரும் கலைந்து சென்றனர்.