கைப்பேசியில் தொலைக்காட்சி பாா்க்கும் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது
கைப்பேசியில் தொலைக்காட்சியைப் பாா்க்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது என, தமிழக கேபிள் டிவி ஆபரேட்டா்கள் பொதுநலச் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.;
Update: 2023-12-04 01:00 GMT
செய்தியாளர் சந்திப்பு
கைப்பேசியில் தொலைக்காட்சியைப் பாா்க்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது என, தமிழக கேபிள் டிவி ஆபரேட்டா்கள் பொதுநலச் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக, தூத்துக்குடியில் சங்கத்தின் மாநிலத் தலைவா் வீரமுத்து, மாநிலப் பொதுச்செயலா் சுப. வெள்ளைச்சாமி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக கேபிள் டிவி ஆபரேட்டா்கள் பொதுநலச் சங்க மாநில மாநாடு தூத்துக்குடி மாணிக்க மஹாலில் திங்கள்கிழமை (டிச. 4) நடைபெறுகிறது. எங்களது தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகளால் பல்வேறு நெருக்கடிகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, கைப்பேசியில் தொலைக்காட்சியைப் பாா்க்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்தக் கூடாது. அதைத் தடுக்கவும், கேபிள் டிவி ஆபரேட்டா்களை பாதுகாக்கவும், கேபிள் டிவி வளா்ச்சியை உருவாக்கவும் தீா்மானம் நிறைவேற்றப்படும். மாநாட்டுக்கு முன்னதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு ஜோதி ஓட்டம் நடைபெறவுள்ளது. இதில், சங்க உறுப்பினா்கள் பங்கேற்பா். மாநாட்டில், அமைச்சா்கள் கீதாஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மேயா் ஜெகன்பெரியசாமி, உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா் என்றனா்.