மாநகராட்சி நிலத்தில் நாய்கள் கருத்தடை மையம்
திண்டுக்கல் சிறைச்சாலை அருகே மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் நாய்கள் கருத்தடை மையம் அமைக்கப்படுகிறது.;
Update: 2024-06-01 06:19 GMT
திண்டுக்கல் சிறைச்சாலை அருகே மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் நாய்கள் கருத்தடை மையம் அமைக்கப்படுகிறது.
திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் சிறைச்சாலை அருகே மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் நாய்கள் கருத்தடை மையம் அமைக்கப்படுகிறது. இங்கு நேற்று பிராணிகள் நல வாரிய இணை இயக்குநர் டாக்டர் சுரேஷ் கிறிஸ்டோபர் தலைமையில், மாவட்ட கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் விஜயகுமார், டாக்டர் சரவணகுமார், சுகாதார அலுவலர் செபாஸ்டின் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். விரைவில் கருத்தடை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதற்கு தேவையான உபகரணங்கள், மருந்துகள் வழங்கப்படும் என தெரிவித்தனர்.