புலி வேட்டைக்குப் போகும்போது எலிவேட்டை பற்றி பேசாதீர்கள்
ஓபிஎஸ் குறித்த கேள்விக்கும் நாங்கள் புலி வேட்டைக்குப் போகும்போது எலிவேட்டை பற்றி பேசாதீர்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்தார்.
Update: 2024-01-12 01:26 GMT
நான் ஆர்ப்பாட்டத்தில் உண்மையை தான் கூறினேன். ஆனால் என்மீது வழக்கு போட்டுள்ளார்கள். நான் பொதுவாழ்வுக்கு வரும் போது திமுக தொடர்ந்த கொலை வழக்கிலேயே முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு அந்த வழக்கில் குற்றமற்றவன் என நிருபித்து விடுதலையானவன் நான். அவதூறு வழக்கெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. வழக்குகள் எல்லாம் எனக்கு ஜீஜீபி. பொதுவாழ்க்கைக்கு வந்தபின்பு வழக்குகளை கண்டெல்லாம் அதிமுககாரர்கள் பயப்பட மாட்டார்கள் தமிழக மக்கள் நாள்தோறும் நான் ஆர்ப்பாட்டத்தில் பேசியதை தான் பேசிக்கொண்டுள்ளனர். ஆனால் நான் மேடையில் பேசியதால் அவதூறு வழக்கு போடுகிறார்கள். குறைகளை களைவதை விட்டோவிட்டு பழைய தகரத்திற்கு பாலீஸ் போடும் வேலையை தான் திமுக செய்கிறது. ஒபிஎஸ் அதிமுக சின்னம் கொடி ஆகாயவற்றை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது குறித்த கேள்விக்கு, நாங்கள் புலிவேட்டைக்கு செல்கிறோம். எலிவேட்டையை பற்றி பேசாதீர்கள் என கூறினார்.