ரயில்வே மைதானத்தை தனியாருக்கு தாரை வார்க்காதே கையெழுத்து இயக்கம்

மதுரை ரயில்வே மைதானத்தை தனியாருக்கு தாரை வார்க்காதே என கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Update: 2023-11-29 11:25 GMT

கையெழுத்து இயக்கம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மதுரை ரயில்வே மைதானம் மற்றும் நில பாதுகாப்புக்குழு சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது மத்திய அரசு பொதுத்துறைகளை தேசியமயமாக்கும் திட்டத்தின் மூலம் மதுரை அரசரடி ரயில்வே மைதானம் மற்றும் ரயில்வே நிலங்களை தனியாக விற்பனை செய்யும் நடவடிக்கை கைவிடக் கோரி மதுரை மாநகரில் மாபெரும் கையெழுத்து இயக்கம்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன், துணை மேயர் தி. நாகராஜன் ஆகியோர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார் மற்றும் ரயில்வே நில பாதுகாப்பு குழு மற்றும் சிபிஎம், சிஐடியு , ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பிலும் மதுரையில் உள்ள முக்கிய 10.பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

பெரியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி வாலிபர் சங்க விளையாட்டு கழகம் சார்பில் நிர்வாகிகள் பால்சாமி, சுடலை, லெனின், ஸ்டாலின், சிபிஎம் மாவட்ட செயலாளர் மா. கணேசன் பகுதி செயலாளர் ஜீவா மற்றும் மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News