நெல்லையில் வீடு வீடாக நிலவேம்பு குடிநீர் வழங்கல்
நெல்லையில் அறக்கட்டளை சார்பில் வீடு வீடாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-30 15:39 GMT
நிலவேம்பு குடிநீர் வழங்கிய நிர்வாகிகள்
நெல்லை மாவட்டத்தில் தற்பொழுது பெய்து வரும் கன மழையின் காரணமாக பொதுமக்களுக்கு சளியும் காய்ச்சலும் பரவலாக பரவி வருகின்றது.
இதனை கட்டுப்படுத்த இன்று காலை குன்னத்தூர் கிராமம், பேட்டை ரூரல் ஊராட்சி வளாகம், ஞானம்மாள் கட்டளை உள்ளிட்ட பகுதிகளில் மதர் தெரேசா சமூக அறக்கட்டளை சார்பில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.