மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பயன்பாடு குறித்த சந்தேகம் அறிய அழைப்பு..!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பயன்பாடு குறித்த சந்தேகம் அறிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் இருப்பு அறையினை நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்திய தேர்தல் ஆணையம், பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 நடைபெறவுள்ளதை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு மையம் அமைக்க அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர இருப்பு அறையிலிருந்து, ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2222 வாக்குச்சாவடிகளின் 10 சதவீத எண்ணிக்கையிலான 223 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு அளிக்கும் பொருட்டு கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியரிடம் 115 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் மற்றும் ஈரோடு கோட்டாட்சியரிடம் 108 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், ஈரோடு , மொடக்குறிச்சி ,பெருந்துறை , பவானி , அந்தியூர , சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய 9 இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு மையம் அமைக்கப்படவுள்ளது. மேற்படி, மையத்தில் வருகிற 18 முதல் அலுவலக நேரத்தில் பொதுமக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைபயன்படுத்தி எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்தும் அறிந்து கொள்வதுடன், வாக்களிப்பதில் உள்ள சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தும் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.