டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா. உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

Update: 2024-04-15 06:34 GMT

மாலை அணிவித்து மரியாதை

டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று அம்பேத்கார் மக்கள் இயக்கம் சார்பில் சேலம் தொங்கும் பூங்கா அருகே உள்ள அம்பேத்கார் உருவ சிலைக்கு மாநில தலைவர் சேலம் ஜங்ஷன் ஆ. அண்ணாதுரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. பின்னர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாநில வழிகாட்டுதல் குழு தலைவர் எம்.ஆசிர்வாதம், சேலம் மாவட்ட தலைவர் ஆ. அம்பேத்கார், மண்டல செயலாளர் தேவூர் பெருமாள், மாவட்ட செயலாளர் சித்தையன், மாவட்ட பொருளாளர் தாதம்பட்டி ரமேஷ் , சேலம் மாநகர தலைவர் நேரு நகர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News