சேலம் நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் மனோஜ் குமார் வேட்பு மனு தாக்கல்

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் மனோஜ் குமார் வேட்பு மனு தாக்கல்.

Update: 2024-03-26 11:31 GMT

 வேட்புமனு தாக்கல் 

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். நாளையுடன் வேட்பு மனு தாக்கல் முடிய உள்ள நிலையில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் மனோஜ் குமார் இன்று கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தா தேவியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதுவரை சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு பத்துக்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News