தனியார் விடுதியில் டாக்டர் மர்மச்சாவு
தனியார் விடுதியில் டாக்டர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-24 12:34 GMT
கோப்பு படம்
திண்டுக்கல் கோவிந்தாபுரம் சமயபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மனோஜ் ரத்தினமாணிக்கம் (43). சித்தா டாக்டர். இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கடந்த சில மாதமாக திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
இந்தநிலையில் நேற்று விடுதியில் இருந்து நீண்ட நேரமாகியும் மனோஜ் ரத்தினமாணிக்கம் வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.