தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளராக அறிவித்த டாக்டர் ராணி
தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளராக அறிவித்த டாக்டர் ராணி.;
Update: 2024-03-20 06:41 GMT
டாக்டர் ராணி
தென்காசி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கரன்கோவில் என்.ஜி.ஓ காலனி பகுதியை சேர்ந்தவர் டாக்டர் .ராணி ஸ்ரீகுமார் இவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணி புரிந்து வருகிறார். இவரது கணவர் ஸ்ரீகுமார் அரசு ஒப்பந்ததாரராகவும் திமுக மாவட்ட விவசாயி துணை அமைப்பாளராகவும் அரசியல் பணியாற்றிய வருகிறார். இவர்களது கணவரது பூர்விகம் என்று பார்த்தால் கீழநீலிதநல்லூர் என்ற மீன்துள்ளி கிராமம் ஆகும். மேலும் மருத்துவர் ராணி பிறந்த ஊரார் என்று பார்க்கும்போது சங்கரன்கோவில் முதல் ராஜபாளையம் சாலையில் உள்ள குவளைக்கண்ணி கிராமம் பிறந்த ஊர் ஆகும். மேலும் இவரது சித்தப்பா மனித உரிமைகள் ஆணைய தலைவராக பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றார். இவரது உறவினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.