வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர்
வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் - அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
By : King 24x7 Website
Update: 2023-12-23 18:01 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரி வளாகத்தில் இருந்து தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமடையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான குடிநீர் வாகனத்தை வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா மதிவேந்தன் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆா்.ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், நகரமைப்பு மண்டல திட்ட குழு உறுப்பினருமான எஸ்.எம்.மதுரா செந்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சுமன், கோட்டாட்சியர் சுகந்தி, விவேகானந்தா கல்லூரி சொக்கலிங்கம், திருச்செங்கோடு ஒன்றிய குழு துணைத் தலைவர் ராஜவேல் என்கிற ராஜபாண்டி திருச்செங்கோடு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்