சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
மதுரை உசிலம்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் அருகேயுள்ள திருமால்புரம் வீரபாண்டி அன்னை வேலு சிட்டி 3-ஆவது தெருவில் வசிக்கும் விஸ்வநாதன் (46). இவர் தனியார் நிறுவன ஊழியராக உள்ளார் . இவர் தனது டூவீலரில் உசிலம்பட்டி -தேனி சாலையில் நேற்று முன்தினம் (டிச.1)இரவு சென்றார். அப்போது தேனியிலிருந்து மதுரை வந்த வேன், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் காயமடைந்த விஸ்வநாதனை அந்தப் பகுதியினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து உசிலம்பட்டி நகர் போலீசார், வேன் ஓட்டுநரான மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த முருகன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.