பிரதான குழாயில் உடைப்பு அம்மையப்பநல்லுாரில் குடிநீர் வீண்

அம்மையப்பநல்லுார் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2024-05-03 07:28 GMT

அம்மையப்பநல்லுார் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் அம்மையப்பநல்லுார் ஊராட்சி, மேட்டு தெரு பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு நிலத்தடியில் புதைக்கப்ட்ட குழாய் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதான குழாயில், இரு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு மாதமாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. கோடை காலம் துவங்கியதில் இருந்தே மாவட்டத்தில், சிலாம்பாக்கம், மேல்ஒட்டிவாக்கம் உள்ளிட்ட கிராமத்தினர் குடிநீருக்காக திண்டாடி வரும் நிலையில், அம்மையப்பநல்லுாரில், கிடைக்கும் தண்ணீரை ஊராட்சி நிர்வாகம் வீணடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், குடிநீர் வீணாகுவதோடு அப்பகுதியில் கொசு உற்பத்தி ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News