திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
கரூர் பிரதான சாலை வழியாக செல்லும் குடிநீர் உந்து குழாயில் உடைப்பு ஏற்பட்டத்தின் காரணமாக பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை திருச்சியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;
குடிநீர் விநியோகம் நிறுத்தம்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பொது தரைமட்ட கிணறு ஆண்டவர் ஆசிரமம் நீரேற்று நிலையத்திலிருந்து பழைய கரூர் பிரதான சாலை வழியாக செல்லும் குடிநீர் உந்து குழாய் இன்று (04.03.2024) உடைப்பு ஏற்பட்டத்தின் காரணமாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளதால், பழைய எல்லக்குடி, ஆலத்தூர், புகழ் நகர், பாரிநகர், சந்தோஷ் நகர் மற்றும் கணேஷ் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் 05.03.2024 ஒருநாள் இருக்காது. 06.03.2024 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.