விபத்தில் காயமடைந்த டிரைவர் தற்காெலை!
தூத்துக்குடியில் விபத்தில் காயமடைந்த டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-05-18 13:02 GMT
தற்கொலை
தூத்துக்குடி முத்தையாபுரம் எல்.ஆர்.பி., நகரைச் சேர்ந்தவர் ஜார்ஜ் மகன் நிர்மல்ராஜ் (37), டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் காயம் அடைந்த அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவரால் தொழிலுக்கு செல்ல முடியவில்லையாம். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவரது மனைவி நித்யா அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.