மரத்தில் கார் மோதி டிரைவர் பலி
புதுக்கோட்டை மாவட்டம்,வீராணம்பட்டு பகுதியில் மரத்தில் கார் மோதி டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Update: 2024-04-26 04:31 GMT
திருமயத்தை அடுத்த வீரணாம்பட்டியை சேர்ந்தவர் விவேக்குமார்(32). கார் டிரைவர். பனையப்பட்டி சென்றுவிட்டு காரில் மீண்டும் ஊர் திரும்பினார். அப்போது ஒரு வளைவில் கார் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளியமரத்தில் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த விவேக்குமார் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். பனையப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.