சுசீந்திரம் அருகே அரசு பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு
சுசீந்திரம் அருகே அரசு பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு-போலீஸ் வழக்கு.;
Update: 2024-03-13 18:08 GMT
டிரைவர் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் வழக்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் அருள் சாம்ராஜ் (68). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை டாக்டரின் கார் டிரைவர் ஆக பணியாற்றி வந்தார். சம்பவ தினம் டாக்டர் வீட்டில் காரை விட்டுவிட்டு, அருள் சாம்ராஜ் தனது ஊருக்கு புறப்பட்டார். இதற்காக நாகர்கோவில் இருந்து கோழிக்கோடு பொத்தை செல்லும் அரசு பஸ்ஸில் ஏறினார். பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் நின்று கொண்டே பயணம் செய்ததாக தெரிகிறது. அந்த பஸ் வழக்கம்பாறை நான்கு வழிச்சாலையில் திரும்பியபோது எதிர்பாராத விதமாய் பஸ்ஸில் நின்றிருந்த அருள் சாம்ராஜ் தவறி வெளியே சாலையில் விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அருள் சாம் ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் சகாய தாஸ் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் பஸ் டிரைவர் ஜெயக்குமார் (55) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.